உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே லெவல் கிராசிங் சாலை பழுது செப்பனிடக் கோரிக்கை

ரயில்வே லெவல் கிராசிங் சாலை பழுது செப்பனிடக் கோரிக்கை

பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே வெள்ளக்கிணர் பிரிவிலிருந்து சரவணம்பட்டி செல்லும் ரோட்டில் ரயில்வே லெவல் கிராசிங் சாலை பழுதடைந்துள்ளது.இதை உடனடியாக செப்பனிட வேண்டுமென கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மேட்டுப்பாளையம் ரோடு, வெள்ளக்கிணர் பிரிவிலிருந்து வெள்ளக்கிணர் செல்லும் ரோட்டில், கோவை மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் ரயில்வே பாதை செல்கிறது. இந்த லெவல் கிராசிங்கை தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ரயில்வே பாதை அருகே உள்ள ரோட்டில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ரயில்வே லெவல் கிராசிங்கை உடனடியாக கடக்க முடியாமல் தடை ஏற்படுகிறது.இது மட்டுமல்லாமல் இரு சக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் நடக்கிறது. மேலும், அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்பவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.எனவே, ரயில்வே அதிகாரிகள், ரயில் பாதையை ஒட்டியுள்ள சாலையை உடனடியாக செப்பனிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !