உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிலில் கை வைக்க மாட்டோம் உறுதியளித்த ரயில்வே அதிகாரிகள்

கோவிலில் கை வைக்க மாட்டோம் உறுதியளித்த ரயில்வே அதிகாரிகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதியில், சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில், சுப்ரமணியர், ஐயப்பன், துர்க்கையம்மன், நவக்கிரகங்கள் சன்னதி உள்ளது. பல ஆண்டுகளாக உள்ள கோவில், ரயில்வே புதுப்பிக்கும் பணிக்காக அகற்ற உள்ளதாக தகவல் பரவியது.இதையடுத்து, சுவாமி விவேகானந்தா சேவா சங்கம், பா.ஜ., நிர்வாகிகள், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் முன்பாக உள்ள விநாயகர் கோவிலை அகற்ற கூடாது என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், பாலக்காடு ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் விவேகானந்தா சேவை மையத்தினர், பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் அருண்குமார் சதுர்வேதியை சந்தித்து மனு கொடுத்து, கோவிலை இடிக்க கூடாது என வலியுறுத்தினர். இதற்கு மேலாளர், கோவிலை அகற்றமாட்டோம் என உறுதியளித்துள்ளார்.பாலக்காடு ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் கூறுகையில், ''பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளரை சந்தித்து கோவிலை அகற்ற கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதற்கு கோவில் இடிக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படும். சுற்றுச்சுவர் கட்டித்தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி