தவற விட்ட கைப்பையை மீட்ட ரயில்வே போலீசார்
கோவை; வடவள்ளியை சேர்ந்தவர் பிரீத்தா. இவர் தனது குடும்பத்துடன் சென்னை சென்று விட்டு நேற்று முன்தினம் ரயிலில் திரும்பினார். நேற்று காலை சோதித்த போது, அவரது கைப்பை ஒன்று காணாமல் போனது தெரிந்தது. அதில், 12 பவுன் நகைகள் இருந்தன. கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்த பிரீத்தா, பையை பல்வேறு பகுதிகளிலும் தேடினார். ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ரயில்வே ஸ்டேஷனின் பின்பகுதியில், கைப்பை கிடப்பது தெரிந்தது. பையை மீட்ட போலீசார் பிரீத்தாவிடம் ஒப்படைத்தனர்.