உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழைக்கு தாங்காத ரோடுகள்

மழைக்கு தாங்காத ரோடுகள்

கோவை: தற்போது பெய்து வரும் மழைக்கு ரோட்டில் தண்ணீர் ஓடுவதால் ரோடு சேதமாகி வருகிறது. ‘பேட்ச் ஒர்க்’ செய்த இடங்களில் அரிப்பு ஏற்பட்டு, ஜல்லிகள் பெயர்ந்துள்ளன; மீண்டும் பள்ளங்கள் உருவாகி இருக்கின்றன. மண் ரோடுகளில் மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாகி இருக்கிறது. வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். வாகன டயர்களில் சேறு சிக்கி, தள்ளக்கூட முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர். மழை நீர் தானே தேங்கி இருக்கிறது என்றெண்ணி, ரோட்டில் வேகமாக செல்வோர், பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி