மேலும் செய்திகள்
தமிழகம், புதுச்சேரியில் 12 வரை மழை தொடரும்
07-Sep-2025
சென்னை:'தமிழகத்தில் செப்., 26 வரை மழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று அதிகபட்சமாக, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அம்பத்துார், சென்னை அயப்பாக்கம், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது. தற்போது, தென் மாநில பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, வடக்கு, தெற்கு மாவட் டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும், 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரை, கடந்த ஜூன் 1 முதல், நேற்று வரையிலான நிலவரப்படி, 30 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பை விட, 5 சதவீதம் அதிகம். வங்க கடலில், மியான்மர் - வங்க தேசம் அருகே, வரும் 25ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
07-Sep-2025