உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதையில்லா கோவையே தேவை விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி

போதையில்லா கோவையே தேவை விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி

கோவை,; கோவை மாநகர போலீஸ் சார்பில், நாட்டின், 79 வது சுதந்திர தினம், போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு, போதைப்பொருட்கள் இல்லா கோவை, ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக, விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. பேரணி, 35, 55, 79 கி.மீ., ஆகிய மூன்று பாதைகளில் நடந்தது. முதல் பாதையான, 35 கி.மீ., பேரணி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துவங்கி, வடகோவை மேம்பாலம், கூட்ஷெட் ரோடு, கடை வீதி, செல்வபுரம் மாதம்பட்டி, தொண்டாமுத்துார், வடவள்ளி, 100 அடி ரோடு, காந்திபுரம் அண்ணா சிலை, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நிறைவடைந்தது. இதேபோல், 55 கி.மீ., பேரணி வடகோவை மேம்பாலத்தில் இருந்து மாதம்பட்டி, இருட்டு பள்ளம் சந்திப்பு, ஈஷாயோகா, நரசீபுரம், தொண்டாமுத்துார், வடவள்ளி, 100 அடி ரோடு வழியாக பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நிறைவடைந்தது. இதேபோல், 79 கி.மீ., இருட்டுப்பள்ளம், சாடிவயல் சோதனை சாவடி, ஈஷா யோகா உள்ளிட்ட அதே பாதையில் வந்து பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நிறைவடைந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் பேசுகையில், ''1947ம் ஆண்டு ஆங்கிலேயர்கள், நம்மால் குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்ற ஏளனமான பார்வை, நம் நாட்டின் மீது இருந்தது. இன்று அனைத்தையும் முறியடித்து, 79 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் நம் தேசம் பெரியளவில் முன்னேறியுள்ளது,'' என்றார். எஸ்.பி., கார்த்திகேயன், கோவை மண்டல குடிமைப் பொருள் எஸ்.பி., பாலாஜி சரவணன், கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர்(வடக்கு) தேவநாதன் உள்ளிட்ட, 200 பேர் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி