உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிய அளவிலான கராத்தே போட்டி; ராமகிருஷ்ணா இன்ஜி., வெற்றி

ஆசிய அளவிலான கராத்தே போட்டி; ராமகிருஷ்ணா இன்ஜி., வெற்றி

பெ.நா.பாளையம்; இலங்கையில் நடந்த ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் துடியலூர் வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.இலங்கையில் ஒன்பதாவது ஆசிய கோஜு ரியு கராத்தே பெடரேஷன் சாம்பியன்ஷிப் -- 2025 போட்டிகள் நடந்தன.இதில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி பி.இ., இறுதியாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர் கைலாஷ், 21, பங்கேற்று, 84 கிலோ பிரிவில் தனிநபர் குமிட்டே போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும், சீனியர் ஆண்கள், 84 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், தனி நபர் கட்டா போட்டியில் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.பி.இ., மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் மாணவர் தாரிணீஷ், 21, வயதுக்குட்பட்ட தனிநபர், 84 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இவ்விருமாணவர்களும், 21 வயது பிரிவில் மிக்ஸ் டீம் கட்டா மற்றும் டீம் குமிட்டே போட்டிகளில் ஒன்றாக இணைந்து தங்கப்பதக்கங்களை வென்றனர். ஆசிய அளவில் பல முன்னணி கராத்தே வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில், கல்லுாரி மாணவர்கள் இருவரும், ஒன்பது பதக்கங்கள் வென்றனர்.இவர்களை எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சுந்தர், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், முதல்வர் சவுந்திரராஜன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் நித்தியானந்தன், உமாராணி உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை