உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

அன்னுார்; அன்னுார் அருகே ருத்திரியம் பாளையத்தில், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று காலை 9:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, மகாலட்சுமி யாகத்துடன் துவங்குகிறது. நாளை (4ம் தேதி) மாலை 4:00 மணிக்கு முதற்கால வேள்வி பூஜை, கலச புறப்பாடு நடைபெறுகிறது. இரவு எண் வகை மருந்து சாத்துதல் நடைபெறுகிறது. வருகிற 5ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. காலை 5:00 மணிக்கு விமானம் மற்றும் மூல ஆலயத்திற்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து அலங்கார பூஜை, தச தரிசனம், சாற்றுமுறை நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ