சூலுாரில் ரங்கோலி போட்டி
சூலுார்: பிரதமர் மோடியின், 25 ஆண்டு கால மக்கள் சேவையை போற்றும் வகையில், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒரு பகுதியாக, சூலுாரில் ரங்கோலி கோலப்போட்டி நடந்தது. பங்கேற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றுகள் வழங்கி, மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி பேசினார். மாநில செயலாளர் மலர்கொடி, மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர்கள் மோகன் மந்திராஜலம், ஜெகநாதன், சூலுார் மண்டல் ஒருங்கிணைப்பாளர் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.