உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் கார்டுதாரர் குறை தீர்ப்பு முகாம்

ரேஷன் கார்டுதாரர் குறை தீர்ப்பு முகாம்

கோவை; கோவை மாவட்டத்தில் உள்ள, 11 தாலுகா அலுவலகங்களில் செயல்படும் வழங்கல் அலுவலகத்தில், பொது விநியோக திட்டங்களுக்கான குறை தீர்ப்பு முகாம் நடந்தது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், நகல் அட்டை பெறுதல், தொலைபேசி எண் சேர்த்தல், குடும்ப தலைவர் போட்டோ மாற்றம் உள்ளிட்ட திருத்தம் சம்பந்தமான மனுக்கள் ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து பெறப்பட்டன.இந்த முகாமில், 344 கார்டுதாரர்கள் பங்கேற்று, திருத்த மனுக்கள் அளித்தனர். கார்டுதாரர்கள் கோரிய திருத்தங்கள் மற்றும் விபரங்கள் சரி செய்யப்பட்டன. இந்த தகவலை, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை