உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எடை குறைவாக இருந்ததால் ரேஷன் பொருட்கள் ரிட்டன்

எடை குறைவாக இருந்ததால் ரேஷன் பொருட்கள் ரிட்டன்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, குமாரபாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வந்த பொருட்கள் எடை குறைவாக இருந்ததால், குடோனுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையம் கிராமத்தில், பகுதி நேர ரேஷன் கடை செயல்படுகிறது. இந்த கடைக்கு, நேற்று மாலை, அரசம்பாளையம் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் இருந்து, லாரி வாயிலாக, புழுங்கல் அரிசி, 900 கிலோ; பச்சரிசி - 300 கிலோ, ஏ.ஏ.ஒய்., கார்டுக்கு புழுங்கல் அரிசி --- 701 கிலோ, எப்.ஆர்.கே., பச்சரிசி --- 538 கிலோ, துவரம் பருப்பு - 139 கிலோ மற்றும் பாமாயில்- 98 (1 லிட்டர்) பாக்கெட்டுகள் கொண்டு வரப்பட்டன.இதில், அரிசி மூட்டைகள் ஒவ்வொன்றும் 50 கிலோ 560 கிராம் இருக்க வேண்டும். ஆனால் அரிசி மூட்டைகளை எடை பார்க்கும் போது, 47 கிலா மட்டுமே இருந்தது. ரேஷன் பொருட்கள் சரி பார்த்து இறக்க பணியாளர்களும் வரவில்லை.இதுகுறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், ரேஷன் பொருட்கள் அனைத்தும் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி