உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் அரிசி பறிமுதல் 

ரேஷன் அரிசி பறிமுதல் 

பொள்ளாச்சி:கேரள மாநிலத்துக்கு கடத்த முயன்ற, 25 டன் ரேஷன் அரிசியை, போலீசார் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷ், போலீசார் சத்துருக்கன், முத்துப்பாண்டி, பிரபு குழுவினர், கேரள மாநில எல்லைப்பகுதியான மதுக்கரை டோல்கட் அருகே தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்டனர். அதில், தர்மபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்தலாரி ஓட்டுனர் ராஜமாணிக்கத்திடம் விசாரித்தபோது, லாரியில் குருணை அரிசி மூட்டைகள் எனக்கூறி பில்லை கொடுத்தார். சந்தேகத்தில், கோவை பறக்கும் படை குடிமைப்பொருள் தனி தாசில்தார் முருகேசன் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, அரிசியை சோதனையிட்டனர். ரேஷன் அரிசி என கண்டறியப் பட்டது. விசாரணையில், தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலம், முல்பகல், தனியார் நிறுவனத்துக்கு கொண்டு சென்று, பாலீஸ் செய்து தமிழகம் வழியாக, கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் அரிசி மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை