உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று மாதமாகியும் திறக்கப்படாத ரேஷன் கடை

மூன்று மாதமாகியும் திறக்கப்படாத ரேஷன் கடை

மேட்டுப்பாளையம், : குறிஞ்சி நகரில் ரேஷன் கடை கட்டி முடித்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஜடையம்பாளையம் புதூர், குறிஞ்சி நகர், சக்தி நகர், அப்துல் கலாம் நகர், இனியா நகர், புளூ ஹில்ஸ் அவென்யூ, ஐஸ்வர்யா நகர், பசுமை நகர், கிரீன் பீஸ் கார்டன் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில், 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடும்பத்தினர் அனைவரும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜடையம்பாளையம் ரேஷன் கடைக்கு சென்று, பொருட்களை வாங்கி வருகின்றனர். வயதானவர்கள் நடந்து சென்று, ரேஷன் பொருட்களை வாங்கி, தலைசுமையாக வீடுகளுக்கு வருகின்றனர். அதனால் இப்பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, கிராம சபை கூட்டங்களில் குறிஞ்சி நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதை அடுத்து குறிஞ்சி நகரில், 12.65 லட்சம் ரூபாய் செலவில் புதிய ரேஷன் கடை கடந்த, ஜனவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளது. அதனால் குடியிருப்பு பகுதி மக்கள், ஜடையம்பாளையம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். எனவே புதிய ரேஷன் கடையை திறக்க, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ