உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊக்கத்தொகை கிடைக்கலை; ரேஷன் கடைஊழியர்கள் கவலை

ஊக்கத்தொகை கிடைக்கலை; ரேஷன் கடைஊழியர்கள் கவலை

கோவை; பொங்கல் தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு, அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை என, ரேஷன் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, ரேஷன்கடை ஊழியர்கள் கூறியதாவது: பொங்கல் தொகுப்பு வழங்குதல் போன்ற அரசின் சிறப்பு திட்டங்களுக்கு பணி செய்யும் போது, நேரம் பார்க்காமல், விடுமுறை எடுக்காமல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை செய்வது வழக்கம். இதற்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிக்கு, கார்டு ஒன்றுக்கு, 59 பைசா கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என, சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு அந்த கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. அறிவிக்கப்பட்ட அந்த தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இதை உடனே வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை