உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாலக நண்பர்கள் திட்டத்தை புதுப்பிக்க வாசகர்கள் எதிர்பார்ப்பு 

நுாலக நண்பர்கள் திட்டத்தை புதுப்பிக்க வாசகர்கள் எதிர்பார்ப்பு 

பொள்ளாச்சி ; மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயன்பெறும் வகையில், வீடு தேடிச் சென்று புத்தகங்கள் வழங்கும் நுாலக நண்பர்கள் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், கிளை நுாலகங்கள், ஊர்ப்புற நுாலகங்கள் என, மொத்தம், 37 நுாலகங்களும், 7 பகுதி நேர நுாலகங்கள் செயல்படுகின்றன. இங்கு, நாளிதழ்கள், வரலாறு, கதை, கவிதை புத்தகங்கள், மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன. மாணவர்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் நுாலகத்திற்கு சென்று திரும்புகின்றனர். அவர்களில் பலர், உறுப்பினர்களாக சேர்ந்து, வீட்டிற்கு புத்தகங்களை எடுத்துச் சென்று தங்களது வாசிப்பை மேம்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாசிப்பு பழக்கம் இருந்தும் நுாலகத்திற்கு வர இயலாத வாசகர்களை கருத்தில் கொண்டு, 'நுாலக நண்பர்கள்' திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் வாயிலாக மாற்றுத் திறனாளிகள், முதியோர், பெண்கள் உள்ளிட்டோர் பயனடைந்தனர். இந்த திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நுாலகர்கள் கூறுகையில், 'தன்னார்வலர்கள் வாயிலாக நேரடியாக வீடு தேடிச் சென்று புத்தகங்கள் வழங்கப்பட்டன. தற்போதைய சூழலில், இத்தகைய பணிக்கும் எவரும் ஆர்வம் காட்டாததால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை