துவக்க பள்ளி மாணவர்களுக்கு இந்திய அரசியல் சட்டம் வாசிப்பு
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 75ம் ஆண்டினை கொண்டாடும் வகையில், தமிழக அரசின் உத்தரவுப்படி, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரை, மாணவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது.மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகள் பற்றிய, பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை புனித செல்வி தலைமை வகித்தார். ஆசிரியை உமா வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சர்மிளா, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆசிரியை அமல சிந்தியா நன்றி கூறினார்.