மேட்டுப்பாளையம்:கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில், 78 ஆயிரத்து 550 மரக்கன்றுகள், நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.மேட்டுப்பாளையம் அருகே, கல்லாறுவில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இங்கு, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, பலா, திராட்சை, மங்குஸ்தான், துரியன், லிச்சி, ரம்புட்டான், மிளகு கிராம்பு, ஜாதிக்காய் இலவங்கப்பட்டை, போன்றவை பயிரிடப்படுகின்றன. தரமான மரக்கன்றுகள் ரூ.10 முதல் 20 வரை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.இதுகுறித்து, கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை மேலாளர் மோகன்குமார் கூறுகையில், ''தற்போது 10 ஆயிரம் சில்வர் ஓக், 2,300 காபி செடிகள், 60 ஆயிரம் மிளகு நாற்றுகள், 2500 பன்னீர் கொய்யா, 1,450 செரி, 850 பலாப்பழ கன்று, 1450 கிராம்பு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு பருவத்திற்கு ஏற்றார் போல் தயாராக உள்ளன. அதே போல் சாமந்தி, சால்வியா உள்ளிட்ட மலர் செடிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.விவசாயிகள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் ஆர்வமுடன் மரக்கன்றுகளை வாங்கி வருகின்றனர்,'' என்றார்.