உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொடி நாள் வசூலில் சாதனை; கோவை மாநகராட்சிக்கு விருது

கொடி நாள் வசூலில் சாதனை; கோவை மாநகராட்சிக்கு விருது

கோவை; மாநில அளவில் கொடி நாள் வசூலில் இலக்கை எட்டி சாதனை புரிந்ததால், சென்னையில் நாளை (26ம் தேதி) நடக்கும் நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சிக்கு, தமிழக கவர்னர் ரவி, விருது வழங்குகிறார்.நமது நாட்டில் முப்படைகளிலும் பணியாற்றி, தாயகத்தை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில், டிச.,7ல் படைவீரர் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது.அரசு துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் வசூலிக்கும் கொடி நாள் நிதியில், முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் நலனுக்கு, நிதியுதவி அளிக்கப்படும்.2024ம் ஆண்டு கோவை மாநகராட்சி ரூ.74 லட்சம் வசூலித்து, நிர்ணயித்த இலக்கை கடந்திருக்கிறது. இதை கவுரவிக்கும் வகையில், 26ம் தேதி குடியரசு தினத்தன்று, கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ரவி, விருது வழங்குகிறார். இவ்விருது பெற, மாநகராட்சியில் இருந்து கமிஷனர் சிவகுரு பிரபாகரன் செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை