உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊர்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

ஊர்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

கோவை: கோவை மாநகர போலீஸ் ஊர்காவல் படைக்கு, ஆள் சேர்க்கும் முகாம் நேற்று நடந்தது.கோவை மாநகர போலீசுடன் இணைந்து, பணியாற்றும் வகையில், ஊர்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஏற்பாடு அவிநாசி சாலை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், 10 பெண்கள் உட்பட, 53 பேர் பங்கேற்றனர்.பங்கேற்றவர்களுக்கு, சான்றிதழ் சரி பார்ப்பு, உயரம், எடை அளவீடு ஆகியன மேற்கொள்ளப்பட்டன. தேர்வு செய்யப்படும் நபர்கள், மாநகர போலீசார் உடன் இணைந்து, பொதுமக்களின் பாதுகாப்பு பணிகளில், ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை