உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை விமான சேவை குறைப்பு; மத்திய அரசுக்கு சியா கடிதம்

கோவை விமான சேவை குறைப்பு; மத்திய அரசுக்கு சியா கடிதம்

கோவை; கோவை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களின் எண்ணிக்கையை விமான நிறுவனங்கள் குறைக்கக்கூடாது என வலியுறுத்தி, சின்னவேடம்பட்டி தொழிற் சங்கம் (சியா) சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு, 'சியா' தலைவர் தேவகுமார் அனுப்பியுள்ள கடிதம்:கோவை விமான நிலையத்தில் இருந்து சேவை வழங்கி வரும் இண்டிகோ விமான நிறுவனம், தனது 3 சேவைகளை வரும் ஜூலை 1ம் தேதி முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனமும் கோவை - சென்னை இடையேயான ஒரு சேவையை நிறுத்தவுள்ளதாக தெரிகிறது.இது, மிகுந்த நெருக்கடியைக் கொடுக்கும். வர்த்தக மற்றும் அரசுத் துறை சார்ந்த பணிகளுக்காக சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு தொழில்துறையினர் அதிகம் பயணிக்கின்றனர். கோவையில் இருந்து விமானப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சேவைகளைக் குறைப்பது என்பது எம்.எஸ்.எம்.இ., அமைப்புகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனவே, விமான நிறுவனங்களிடம் இதுகுறித்துப் பேசி, சேவைக் குறைப்பை கைவிட வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி