உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராமப்புற மாணவர் கிரிக்கெட்டுக்கு பதிவு

கிராமப்புற மாணவர் கிரிக்கெட்டுக்கு பதிவு

கோவை: ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் ஈஸ்ட் சார்பில், கிராமப்புற மாணவர் கிரிக்கெட் போட்டி சரவணம்பட்டியில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது.கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் நலச்சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் ஈஸ்ட் சார்பில், கிராமப்புற மாணவர் கிரிக்கெட் போட்டி அக்., 2ம் தேதி நடக்கிறது. சரவணம்பட்டி டி.கே.எஸ்., மெட்ரிக் பள்ளியில், 'கதிரவன் எழுந்து மறையும் வரை' என்ற பெயரில் நடக்கும் இப்போட்டியில், 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். 'கிரீன் டென்னிஸ்' பந்து கொண்டு போட்டி நடக்கிறது. நாளைக்குள் அணிகளை பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, 96292 29052, 94430 59837 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை