உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மத போதகர், உறவினர் ஜாமின் மனு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மத போதகர், உறவினர் ஜாமின் மனு

கோவை; சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், போக்சோ சட்டத்தில் கைதான மத போதகர் மற்றும் அவரது உறவினர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.தென்காசி மாவட்டம், செங்கோட்டை, வல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜான்ஜெபராஜ்,37; கிறிஸ்தவ மத போதகரான இவர், கோவை, ஜி.என்.மில் பகுதியில் வசித்து வருகிறார். காந்திபுரம்,கிராஸ்கட் ரோட்டில், கிறிஸ்தவ சபை நடத்தி வந்தார். இந்நிலையில், அவரது வீட்டில் நடந்த ஜெபக்கூட்டத்தின் போது, 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தார். புகாரின் பேரில், காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்த போது, ஜான் ஜெபராஜ் மற்றும் அவரது உறவினர் ெபன்னட் ஹாரிஸ்,32, ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது. இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இருவரும் ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை