உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மைதானத்தை சீரமைக்க தயக்கம்; கவலையில் கால்பந்து வீரர்கள்

மைதானத்தை சீரமைக்க தயக்கம்; கவலையில் கால்பந்து வீரர்கள்

வால்பாறை : வால்பாறை நகராட்சி கால்பந்து மைதானத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், விளையாட்டு வீரர்கள் அதிருப்தியில் உள்ளனர்.வால்பாறை நகரின் மத்தியில் நகராட்சி கால்பந்து விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் ஆண்டு தோறும், மாநில, மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நடக்கிறது.இந்நிலையில், கால்பந்து சங்க நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் விளையாட்டு மைதானம் நகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டது. ஆனால் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் விளையாட்டு வீரர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.விளையாட்டு மைதானத்தை சுற்றி ஆக்கிரமிப்புக்கள் உள்ளதாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், விளையாட்டு வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியாத நிலை உள்ளது.வால்பாறை கால்பந்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:வால்பாறையில் விளையாட்டு வீரர்கள், நகராட்சி விளையாட்டு மைதானத்தை நம்பிதான் உள்ளனர். மாவட்ட, மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் இந்த மைதானத்தில் நடக்கிறது.போட்டி துவங்குவதற்கு முன்னதாக நகராட்சி சார்பில், விளையாட்டு மைதானத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும். பழுதடைந்த நிலையில் உள்ள கலையரங்கத்தையும் கட்டித்தர வேண்டும். மைதானத்தில் விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை