உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரிகள் தீவிரம்

ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரிகள் தீவிரம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சுல்தான்பேட்டை நெடுஞ்சாலை பிரிவுக்கு உட்பட்ட அவிநாசி - திருப்பூர் - பல்லடம் - பொள்ளாச்சி - கொச்சின் (வழி) - மீன்கரை ரோட்டில், காமநாயக்கன்பாளையம் நான்கு வழி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவின்படி, காமநாயக்கன்பாளையம் நான்கு வழி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை