உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; அதிகாரிகள் திடீர் சுறுசுறுப்பு

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; அதிகாரிகள் திடீர் சுறுசுறுப்பு

வால்பாறை: வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.சுற்றுலா பயணியர் அதிகளவில் வரும் வால்பாறை நகரில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி, கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடை அகற்றாததால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், 'போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்த, 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகும் கடைகள் அகற்றாததால், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பொக்லைன் கொண்டு, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வருகின்றனர். புதுத்தோட்டம் பகுதியிலிருந்து வாட்டர்பால்ஸ் வரையிலான கடைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ