வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மதம் மாறியபின்பும் சலுகைகளை அனுபவிப்பவர்களுக்கு செய்யும் உதவி அவ்வளவுதான்,
கோவை; இட ஒதுக்கீடு பெறும் விதமாக ஜாதி சான்றிதழில் இந்து என்ற வார்த்தை சேர்க்குமாறு இந்து இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது.இந்து இளைஞர் முன்னணி கோவை மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், மாவட்ட நிர்வாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:மாநிலத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் ஜாதி சான்றிதழ்களில், தி.மு.க., அரசானது 'இந்து' என்ற வார்த்தையை நீக்கி உள்ளது. ஒவ்வொரு ஜாதி பெயரின் முன்பும் இந்து என்ற வார்த்தை நீக்கப்பட்டு தற்போது ஜாதியின் பெயர் மட்டும் குறிப்பிடப்படுகிறது. இந்து விரோத தி.மு.க., அரசின் இந்நடவடிக்கை மாணவர்கள், பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜாதி சான்றிதழில் இந்து என்ற வார்த்தை சேர்க்கப்பட்டால் மட்டுமே இட ஒதுக்கீடு பெறமுடியும். இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கையை தி.மு.க., அரசு வலியுறுத்தி வருகிறது. இப்படி தொடர்ந்து இந்து என்ற வார்த்தையை ஜாதி சான்றிதழில் இடம்பெற செய்யாமல், பட்டியல் இன மக்களுக்கு தி.மு.க., அரசு துரோகம் இழைக்கிறது. எனவே, இந்து என்ற பெயர் இடம்பெற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மதம் மாறியபின்பும் சலுகைகளை அனுபவிப்பவர்களுக்கு செய்யும் உதவி அவ்வளவுதான்,