இடையூறாக இருந்த மரங்கள் அகற்றம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ரோட்டில், கடந்த மாதம் பைக் பயணம் செய்த மூவர் மீது ரோட்டோரத்தில் இருந்த அலங்கார கொண்டை மரக்கிளை முறிந்து விழுந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் ரோட்டில் ஓரத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்த மரங்களை வெட்டி அகற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வருவாய்த் துறையினர் அனுமதி பெற்று, நேற்று முதற்கட்டமாக, 4 மரங்கள் அகற்றப்பட்டது.மேலும், ரோட்டோரத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மரங்களும் வெட்டப்படும், என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, ஊராட்சி பகுதியில் புதிதாக மரக்கன்று நடவு செய்யப்படும், என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.