உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க! மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க! மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

கோவை,: கோவையில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடந்தது.நகர் நல அலுவலர் (பொ) பூபதி முன்னிலை வகித்தார்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது:மழையை எதிர்கொள்வது தொடர்பான பணிகளை அனைத்து பிரிவு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மின் மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரங்களை தயாராகவும், கூடுதலாகவும் வைத்திருக்க வேண்டும். நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பழுதடைந்துள்ள பள்ளி கட்டடங்கள் மற்றும் தடுப்பு சுவர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். மழையால் பாதித்த இடங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்க துாய்மை பணியை விரைவுபடுத்த வேண்டும். மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறையினர் தயாராக இருக்க வேண்டும்.தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு, முகாம்களில் தங்க வைக்க வேண்டும்; அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.அப்போது, நிர்வாக பொறியாளர்கள் இளங்கோவன், கருப்பசாமி, நகரமைப்பு அலுவலர் குமார் மற்றும் மண்டல உதவி கமிஷனர்கள், உதவி நிர்வாகப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !