உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியரசு தின விளையாட்டு போட்டிகள்: கோவை வீரர், வீராங்கனைகள் அபாரம்

குடியரசு தின விளையாட்டு போட்டிகள்: கோவை வீரர், வீராங்கனைகள் அபாரம்

கோவை; மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில், கோவை வீரர்கள் மூன்று இடங்களையும், வீராங்கனைகள் இரு இடங்களையும் பிடித்துள்ளனர்.மதுரையில் மாநில அளவிலான, 65வது குடியரசு தின விழா விளையாட்டு போட்டிகள் சமீபத்தில் நடந்தது. மாவட்ட அளவிலான போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோவை வீரர், வீராங்கனைகள், மாநில அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.மாவட்டத்தில் இருந்து பங்குபெற்ற, பள்ளி அணிகளில் கால்பந்து போட்டியில் பயனீர் மில் மேல்நிலை பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், கோ-கோ போட்டியில்தியாகி என்.ஜி.ஆர்., நினைவு மேல்நிலை பள்ளி இராண்டாமிடமும், இறகுப் பந்து ஒற்றையர் பிரிவில், பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இராண்டாமிடமும்பிடித்தன.மாணவியருக்கான எறிபந்து போட்டியில், பிரசன்டேஷன் கான்வென்ட் மேல்நிலை பள்ளி இரண்டாம் இடமும், கூடைப்பந்து போட்டியில் கிருஷ்ணம்மாள் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பிடித்தன. வெற்றி பெற்ற அணி வீரர்களை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி