உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை மேலாண்மை செய்ததற்கு தொகை விடுவிக்க வேண்டுகோள்

குப்பை மேலாண்மை செய்ததற்கு தொகை விடுவிக்க வேண்டுகோள்

கோவை: வெள்ளலுார் கிடங்கில் குப்பையை, மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையில், 10 கோடி ரூபாயை, 15 நாட்களுக்குள் விடுவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை நகர பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் செயல்படும், 'கோயமுத்துார் இன்டகிரேடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட்' என்கிற, தனியார் நிறுவனம் மூலம் மேலாண்மை செய்யப்படுகிறது.இந்நிறுவனத்துக்கு நாளொன்றுக்கு, 440 டன் குப்பை வழங்குவதற்கு மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது.இருப்பினும், உத்தேசமாக, 600 டன் குப்பையை அந்நிறுவனம் மேலாண்மை செய்து அழிக்கிறது. இச்சேவைக்கு மாநகராட்சி கட்டணம் வழங்க வேண்டும்.இந்நிறுவனம், 2011 முதல் செயல்பட்டு வருகிறது. குப்பை மேலாண்மைசெய்ததற்கு முழுத்தொகை வழங்காமல், ஒரு பகுதியை மாநகராட்சி நிறுத்தி வைத்திருக்கிறது. இதுதொடர்பாக, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணையில் இருக்கிறது.இந்நிதியாண்டில், ஏப்., முதல் ஆக., வரையிலான காலத்துக்கு ரூ.27.71 கோடி வழங்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் ரூ.10.13 கோடி மட்டும் வழங்கியுள்ளது.நிலுவை தொகை கேட்டு, தனியார் நிறுவனம் சார்பில் மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், 15 நாட்களுக்குள் குறைந்தபட்சம், 10 கோடி ரூபாயாவது விடுவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''குப்பை மேலாண்மை நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஆர்ப்பிட்ரேசனில் நடந்து வருகிறது. தீர்ப்பு கூறுவதற்கு முன் நிதி விடுவிக்க வாய்ப்பில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை