மேலும் செய்திகள்
வீணாகும் நிழற்கூரை; மக்கள் அதிருப்தி
15-Oct-2025
சூலுார்: மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் நிழற்குடை அமைக்க வேண்டும், என, நல்லுார்பாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுல்தான்பேட்டை ஒன்றியம் நல்லுார் பாளையம் மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட பொறுப்பாளர் வேலு மந்திராஜலம், மோகன்ராஜ் ஆகியோர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்த மனு விபரம்: வதம்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லுார்பாளையம் கிராமத்தில், 1000 த்துக்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் வசிக்கின்றனர். பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், தொழிலாளிகள், முதியவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும், இரு அரசு பஸ்களை நம்பி உள்ளனர். கொடிக்கம்பம் அருகே காத்திருந்து பஸ்சில் சென்று வருகின்றனர். அந்த இடத்தில் நிழற்குடை அமைத்து தர கோரி வந்தனர். இந்நிலையில், எம்.பி., நிதியில் இருந்து நிழற்குடை கட்ட முடிவு செய்து இடம் தேர்வு செய்துள்ளனர். அந்த இடம் மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து தொலைவில் உள்ளது. வளைவான அந்த இடத்தில் மழை நீர் கடந்து செல்லும். அதனால், அங்கு நிழற்குடை அமைத்தால் மக்களுக்கு பயன் இருக்காது. பட்டத்தரசி அம்மன் கோவில் கொடிக்கம்பம் அருகே நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
15-Oct-2025