உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

கோவை; கோவை மாவட்டத்தில், ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், கல்வி பணிகள் செயல்படுவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வியின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும், முக்கியப் பொறுப்பில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஈடுபடுகின்றனர். புத்தகங்கள் வழங்குவது முதல் மாணவர்களுக்கான அனைத்து கற்றல் சார்ந்த மற்றும் கற்றல் சாரா திட்டங்களும், இவர்களின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், 114 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் 79 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அலுவலக உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. பயிற்றுநர் கலந்தாய்வின் மூலம் பணி மாறுதல் பெற்றவர்களுக்கும், அயல் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, கல்வித் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இப்பற்றாக்குறையால், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், திட்ட மேம்பாடு போன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கல்விப் பணிகளில் தேக்கம் ஏற்படாமல் இருக்க, காலியாக உள்ள பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ