உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த கோரிக்கை

ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த கோரிக்கை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனை ரயில் பயணியர் சங்கத்தினர் மற்றும் ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பார்வையிட்டனர். கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரு சில வசதிகள் மட்டும் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து ரயில் பயணியர் புகார் அளித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, பாலக்காடு ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ஆனந்த் மற்றும் கிணத்துக்கடவு ரயில் பயணியர் நல சங்கத்தினர் இணைந்து, ஸ்டேஷனில், பிளாட்பார்ம் நீட்டிப்பு, ரயில்வே ஸ்டேஷன் கீழ்பகுதியில் உள்ள கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், கண்காணிப்பு கேமரா செயல்பாடு உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிட்டனர். இதுகுறித்து, பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை