உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் பாதை ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

கோவில் பாதை ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

கருமத்தம்பட்டி; ''கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள கம்பி வேலியை அகற்றி, பக்தர்கள் இடையூறு இல்லாமல் வழிபட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, கணியூர் பக்தர்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.சூலுார் அடுத்த கணியூரை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் கிராம மக்கள், தாசில்தாரிடம் அளித்த மனு விபரம் :கணியூரில் இருந்து மாதப்பூர் செல்லும் ரோட்டில், 9 சென்ட் பரப்பில், 300 ஆண்டுகள் பழமையான அண்ணமார் சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள சுவாமியை பல ஆண்டுகளாக, குல தெய்வமாக நாங்கள் வழிபட்டு வருகிறோம். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறோம்.நில அளவைத்துறை யினரால், பராமரிக்கப்படும், 1912ம் ஆண்டுக்குரிய, 'அ' பதிவேட்டில் அந்த இடம் கோவிலுக்கு உரியது என்று உள்ளது. இந்நிலையில், தனி நபர் ஒருவர், கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளார். இதனால், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட முடியாத நிலையும், கோவிலை புனரமைக்க முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. அதனால், உரிய கள ஆய்வு செய்து, பாதையை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள கம்பி வேலியை அகற்றி, பக்தர்கள் இடையூறு இன்றி, கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !