உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டுறவு கடன் சங்கம் வழங்கியது ஆராய்ச்சி நிதி

கூட்டுறவு கடன் சங்கம் வழங்கியது ஆராய்ச்சி நிதி

கோவை; வீரகேரளம் நகர கூட்டுறவு கடன் சங்கம், கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி செலுத்தியது. கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியை, லாபத்தில் இயங்கக் கூடிய சங்கங்கள், குறிப்பிட்ட சதவீதம் வழங்குகின்றன. இது, கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், புதிய திட்டங்களை செயல்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது. இதன் வாயிலாக, கூட்டுறவு சங்கங்கள் நவீனமயமாக்கப்பட்டு, அவர்களின் சேவைகள் மேம்படுத்தப்படும். இதேபோல், கூட்டுறவு சங்கங்கள் கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக, கூட்டுறவு கல்வி நிதியும், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திடம் வழங்கப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக, கே 2069 வீரகேரளம் நகர கூட்டுறவு கடன் சங்கம், கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்குச் செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கான காசோலையை, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரியிடம், சங்கத்தின் செயலாளர் முருகேசன் வழங்கினார். கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் விமல்ராஜ் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை