உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருப்பு கட்டுமான பணி: வனத்துறை அதிகாரி ஆய்வு

குடியிருப்பு கட்டுமான பணி: வனத்துறை அதிகாரி ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில், யானை பாகன்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணியை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியாசாஹு ஆய்வு செய்தார்.ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் அருகே, கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. அங்கு யானைகள் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பாகன்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதில், 41 யானை பாகன்கள், உதவியாளர்களுக்கான வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இப்பணியை, வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியாசாஹு ஆய்வு செய்தார். பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை