மேலும் செய்திகள்
பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
02-May-2025
வால்பாறை, ; வால்பாறையில் உள்ள துவக்கப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.வால்பாறை துாய இருதய துவக்கப்பள்ளியில் கடந்த, 1991 - 96 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி தாளாளர் ரெஜினாமேரி தலைமையில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மேகலா வரவேற்றார்.விழாவில், முன்னாள் ஆசிரியர்கள் மேரி, செலின்சிசிலியா, லுாயிஸ்அதரியான், மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அவர்களுக்கு பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், மாணவர்கள் நண்பர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளி படிப்பு முதல் தற்போது வரை வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான தகவல்களை மாணவர்கள் ஒருவருக்குகொருவர் பறிமாறிக்கொண்டனர்.விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சத்தியமூர்த்தி, பாலாஜி, முகேஸ், ராஜேந்திரபிசாத், பூங்கொடி, உமா ஆகியோர் செய்திருந்தனர்.
02-May-2025