உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டம்

வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டம்

தொண்டாமுத்தூர்: பேரூர் தாலுக்கா அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறையினர் ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பேரூர் தாலுகா அலுவலகத்தில், நடந்த ஆர்ப்பாட்டத்தில், 30க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினர், மாலையில் ஒரு மணி நேரம் பணி வெளிநடப்பு செய்தனர். காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், பணியின் போது உயிரிழக்கும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படை பணி நியமனத்திற்கு உச்சவரம்பை, மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட, 8 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி