உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சப்பாத்திக்கு தரும் சலுகையை அரிசி மாவுக்கும் தர வேண்டும்

 சப்பாத்திக்கு தரும் சலுகையை அரிசி மாவுக்கும் தர வேண்டும்

கோவை: தி.மு.க., வர்த்தக அணி நிர்வாகிகள், மாநகர் மாவட்ட அமைப்பாளர்கள், தலைவர்கள் கூட்டம் காளப்பட்டியில் நடந்தது. மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமையில், கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிச்செல்வன் முன்னிலையிலும் நடந்த இக்கூட்டத்தில், 'மதுரை, கோவை மாநகரில், 20 லட்சம் மக்கள் இருந்தும், அதைவிட மக்கள் தொகை குறைவான ஆக்ரா, இந்துார், பாட்னாவில் மெட்ரோ ரயிலுக்கு ஆதரவு தந்த மத்திய அரசு, கோவை, மதுரைக்கு தர மறுப்பது வேதனைக்குரியது. எனவே, கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும். வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்திக்கு தரும் சலுகையை, அரிசி மாவுக்கும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ