மேலும் செய்திகள்
அறிவு, கலை திறன் போட்டிகளில் சாதித்த மாணவர்கள்
11-Feb-2025
கோவை; ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'ரிகாலியா' என்ற பெயரில், கல்லுாரி மாணவர்களுக்கிடையேயான, மாபெரும் கலை விழா போட்டிகள் நடந்தது.சிறப்பு விருந்தினர் பின்னணிப்பாடகர் திவாகர் துள்ளலான பாடல், ஆடல் மூலம் மாணவர்களை மகிழ்வித்தார். நடனம், பாடல், இசைக்கருவிகள் வாசித்தல் என, பல்வேறு போட்டிகள் நடந்தன.தமிழகம் முழுவதுமிருந்து, 105 கல்லுாரிகளிலிருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஜே.எஸ்.எஸ்., இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் கல்லுாரி மாணவர்கள், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். விழாவில், கோவை மாவட்ட அரசுப்பள்ளித் தலைமையாசிரியர்களின் கல்விப்பணியை ஊக்குவிக்கும் விதமாக, கல்லுாரி சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. கல்லுாரியின் தலைவர் மஹாவீர் போத்ரா, செயலாளர் சுனில்குமார் நஹாடா, துணைச்செயலாளர் பாரத்குமார் ஜெகமணி, கருவூலர் அசோக் லுானியா, முதல்வர் சுப்பிரமணி, கோவை நலச் சங்க உறுப்பினர்கள் தல் மேத்தா மற்றும் அபய் ஜெயின் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
11-Feb-2025