மேலும் செய்திகள்
பராமரிப்பு இல்லாத கிணறு
13-Apr-2025
குடிமங்கலம்; விருகல்பட்டி சந்திப்பில் பராமரிப்பில்லாத பொதுக்கிணற்றால், விபத்து அபாயம் நிலவியும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் புதுார். இந்த கிராம பஸ் ஸ்டாப் அருகே, நால்ரோடு சந்திப்பு அமைந்துள்ளது. சந்திப்பின் அருகில், பராமரிப்பில்லாத பொதுக்கிணறு உள்ளது.முன்பு, குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட கிணறு போதிய பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. உட்புறத்தில் மரங்கள் முளைத்து, அச்சுறுத்தும் வகையில் கிணறு உள்ளது.இரவு நேரங்களில், நஞ்சேகவுண்டன்புதுார் வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், ரோட்டோரத்தில் கிணறு இருப்பது தெரியாமல் நிலைதடுமாறுகின்றனர். அவ்விடத்தில், தெருவிளக்குகளும் முறையாக எரிவதில்லை.இது குறித்து புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. விபத்து ஏற்படும் முன், தெருவிளக்குகளை பராமரித்து, கிணற்றுக்கு கம்பி வேலி அமைக்க வேண்டும். துார்வாரி கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
13-Apr-2025