உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிப்பர் லாரிகளால் ரோடு சேதம்; கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை

டிப்பர் லாரிகளால் ரோடு சேதம்; கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பகவதிபாளையம் ரோட்டில் லாரிகளில், அதிகளவு கனிமவள கற்கள் பாரம் ஏற்றி செல்வதால் ரோடு சேதமடைந்துள்ளது. கிணத்துக்கடவு, பகவதிபாளையம் வழியாக நெ.10.முத்தூர், சிங்கையன்புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் குவாரிகள் அமைந்துள்ளதால் டிப்பர் லாரி போக்குவரத்தும் அதிகம் உள்ளது. இதில், கிராமப்புற ரோடுகள் வழியாக, 10 மற்றும் அதற்கு மேற்பட்ட சக்கரம் கொண்ட பெரிய டிப்பர் லாரிகள் இயக்கப்படுகிறது. இதுமட்டுமின் றி குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் அதிக பாரம் ஏற்றி லாரிகள் செல்வதால், ரோடு விரைவாக சேதமடைகிறது. இதனால் மக்கள் ரோட்டில் பயணிக்க சிரமப்படுகின்றனர். குறுகலான ரோட்டில் பெரிய டிப்பர் லாரி செல்லும்போது, அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட 'ஓவர் டேக்' செய்யவோ, எதிரில் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்துடன் ரோட்டில் சேதமடைந்த பகுதியை கடக்கும் போது புழுதி பரப்பதால், பைக் ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், இந்த வழித்தடத்தில் தினமும் விபத்து அச்சத்துடன் மக்கள் பயணிக்கின்றனர். எனவே, கிராமப்புற ரோட்டின் பெரிய டிப்பர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். டிப்பர் லாரிகளுக்கும் கட்டுப்பாடு விதித்து, விதிமுறையை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். இது குறித்து, இந்த வழித்தடத்தில் அறிவிப்பும் வைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ