மேலும் செய்திகள்
நாளைய மின்தடை அறிவிப்பு
11-Mar-2025
கோவை: கோவையில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள், மழையால் சேறும் சகதியுமாக மாறியிருக்கின்றன.துடியலுார், வெள்ளக்கிணறு, சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதியிலும், கணபதி, மணியகாரன்பாளையம், கணபதி மாநகர், காந்தி மாநகர், ஒண்டிபுதுார் ஆகிய இடங்களில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்படுகிறது.பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் மற்றும் பகிர்மான குழாய் பதிக்கப்படுகின்றன. இம்மூன்று திட்டங்களுக்காக, தோண்டப்பட்ட ரோடுகள் படுமோசமாக காணப்படுகின்றன.மழை காரணமாக, 1, 3, 4, 5, 10, 13, 14, 15, 17, 19, 34, 38, 39, 40, 42, 44, 56, 57, 69 ஆகிய, 19 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், சாலைகள் சேதமடைந்திருக்கின்றன.போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், சேறும் சகதியுமாக காணப்படுவதால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.மழை பெய்தால் சாலைகள் சகதியாகி விடுவதால், வாகனங்களிலும் செல்ல முடிவதில்லை; நடந்து செல்வதற்கும் சிரமப்பட வேண்டியுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மழையால் பாதிக்கப்பட்டுள்ள வார்டுகளில், வி.பி.வி., நகர், குப்புசாமி லே-அவுட், நேரு நகர், மருதம் நகர், போஸ் கார்டன், துடியலுார் - சரவணம்பட்டி - கீரணத்தம் சாலை, சேடன் தோட்டம், மெஜஸ்டிக் அவென்யூ, பாலாஜி கார்டன், வெள்ளக்கிணறு - உருமாண்டம்பாளையம் ரோடு, சேரன் நகர், ஸ்ரீகிருஷ்ணா அவென்யூ, சாஸ்திரி நகர், பொன்விழா நகர், கந்த கோனார் தெரு, பூம்புகார் நகர், மணியகாரம்பாளையம், சவுடாம்பிகா நகர், ஸ்ரீசக்தி அவென்யூ, பாரதி வீதி, டான்சா நகர், ஓம் கணேஷ் நகர், பொம்மனாம்பாளையம், மகாராணி அவென்யூ, சிவாஜி காலனி, சிந்தாமணி நகர், சூர்யா நகர், பாரதி பார்க் பிரதான சாலை, மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11-Mar-2025