சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மன்ற துவக்க விழா நடந்தது. தலைமையாசிரியர் தேன்மொழி தலைமை வகித்தார்.டாக்டர் மணிகண்டன், உயிர் குட்டி காவலர் அமைப்பு மகேஷ் பங்கேற்று பேசினர். மாணவ, மாணவியருக்கான சாலை பாதுகாப்பு மன்ற சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து, புகைப்பட கண்காட்சி நடந்தது.மாணவர்கள் பங்கேற்று கண்காட்சியை கண்டுகளித்தனர். உதவி தலைமையாசிரியர் மேகலா, ஆசிரியர் மஞ்சுளா, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.