நேஷனல் மாடல் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கோவை; பீளமேடு நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 2025-26ம் கல்வியாண்டுக்கான சாலை பாதுகாப்பு விழா நடந்தது. சாலை பாதுகாப்பு அதிகாரி முருகேசன், தலைமை காவலர் ரெங்கபிரபு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சாலைப்பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அவர்கள் எடுத்துரைத்தனர். மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நாடகம் அனைவரையும் கவர்ந்தது. இறுதியாக, மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. சாலை விதிகளை பின்பற்றி, சாலைப்பாதுகாப்பை பின்பற்றுவோம் என, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். பள்ளி முதல்வர் பேபி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.