மேலும் செய்திகள்
முதல்வர் கவனம் சிறப்பு கட்டுரை
09-Nov-2024
நெகமம்; நெகமம் -- கப்பளாங்கரை ரோடு விரிவக்கப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.நெகமம் -- வடசித்துார் -ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டில் தென்னை சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன.இந்நிலையில், கனரக வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், ரோட்டில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை சார்பில், ரோடு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, கப்பளாங்கரை முதல் நெகமம் வரை, 2.2 கி.மீ., துாரத்துக்கு, 1.5 மீட்டர் அகலத்துக்கு, 2.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள் நடக்கிறது.பணிகள் நிறைவடைந்த பின், இவ்வழியில் செல்லும் வாகனங்கள் இடையூறு இன்றி பயணிக்கலாம். கனரக வாகனங்கள் சென்றாலும், எதிர் திசையில் வரும் வாகனங்கள் சிக்கலின்றி செல்லலாம், என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
09-Nov-2024