உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலைப்பணியாளர்கள் மவுன புரட்சி போராட்டம்

சாலைப்பணியாளர்கள் மவுன புரட்சி போராட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில், மவுன புரட்சி போராட்டம் நடந்தது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், கண், காது, வாயை பொத்தி மவுன புரட்சி போராட்டம், பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் பேசினார். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டினை திரும்ப பெற வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திட வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களை சாலைப்பணியாளர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோட்ட செயலாளர் ஜெகநாதன், கோட்ட தலைவர் சின்னமாரிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர். கோட்ட பொருளாளர் சந்திரபோஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ