உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை மேம்பாலத்தில் சாலை தடுப்பு வைப்பு

காரமடை மேம்பாலத்தில் சாலை தடுப்பு வைப்பு

மேட்டுப்பாளையம்; காரமடை ரயில்வே மேம்பாலத்தில் விபத்துகள் நிகழாமல் இருக்க நடுப்பகுதியில் நிரந்தர தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், காரமடை நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன. மேம்பாலத்தின் நடுப்பகுதியில் எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் இருந்தது.மேலும், கோவையில் இருந்து வரும் போது காரமடை மேம்பாலத்தில் ஏறி இறங்கும் போது, கன்னார்பாளையம் செல்லும் ஜங்சன் சாலை வலது பக்கம் பிரிந்து செல்கிறது.இதற்காக மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இறங்கும் இடத்தில் சாலையின் நடுவே தடுப்புகள் உள்ளன. புதிதாக வரும் வாகனங்களுக்கு இந்த தடுப்புகள் குறித்து தெரியாததால், வாகனங்கள் இந்த தடுப்புகளில் மோதும் அபாயம் இருந்தது.அண்மையில் கார் ஒன்று இந்த தடுப்பில் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேம்பாலத்தில் விபத்துகள் நிகழாமல் இருக்க மேம்பாலம் முழுவதும் நடுப்பகுதியில் நிரந்தர தடுப்பு வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இச்செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. தற்போது செய்தியின் எதிரொலியாக காரமடை ரயில்வே மேம்பாலத்தின் நடுப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ