உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரோட்டோர குப்பையால் துர்நாற்றம் அதிகரிப்பு

 ரோட்டோர குப்பையால் துர்நாற்றம் அதிகரிப்பு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டோரம் உள்ள குப்பை அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இந்த கடைகளின் குப்பையை மூட்டையாக கட்டி சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் குவிக்கப்படுகிறது. அவ்வப்போது குப்பை மூட்டை அகற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ரோட்டோரம் உள்ள குப்பை அகற்றும் செய்யாமல் உள்ளது. இதில் உள்ள சில காய்கறி கழிவு அழுகும் நிலையில் இருக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் அதிகரித்துள்ளது. எனவே, ரோட்டோரம் கொட்டப்பட்ட குப்பையை விரைவில் அகற்றம் செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !