உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளையர் கைவரிசை

ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளையர் கைவரிசை

கோவை; கோவையில், ஒரே நாளில் இரு வீடுகளுக்குள் நுழைந்து வெளிநாட்டு கரன்சிகள், நகைகளை திருடிச் சென்ற கொள்ளைர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, சாயிபாபா காலனி கே.கே.புதுாரை சேர்ந்தவர் இஜாஸ் அஹமத், 32. கடந்த, 21ம் தேதி இரவு கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு, தனது அறையில் துாங்கினார். நேற்று முன்தினம் அதிகாலை குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, பீரோ இருந்த அறையில் துணிகள், பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, ஜன்னலில் போடப்பட்டிருந்த கொசுவலை கிழிக்கப்பட்டிருந்தது.பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம், சவுதி ரியால்-60, சிங்கப்பூர் டாலர் ஐந்து ஆகியன கொள்ளை போயிருந்தன. வீட்டில் அனைவரும் துாங்கிக் கொண்டிருந்த சமயத்தில், ஜன்னல் கொசுவலையை கிழித்து, அதன் வழியாக கதவின் உள்புற தாழ்ப்பாளை திறந்து, கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்திருப்பது தெரியவந்தது.இதேபோல், பக்கத்து வீட்டில் வசிக்கும் இஜாஸ் அஹமத் உறவினர் வீட்டின் கதவையும் திறந்து ரூ.8 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் தங்கக்காசுகள் திருடப்பட்டிருந்தன. சாயிபாபா காலனி போலீசார் விசாரிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை